Home Tamil Cinema News சூர்யாவின் 24 படம் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்

சூர்யாவின் 24 படம் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்

344

suriya759சூர்யாவின் 24 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர, படம் எப்போது வரும் என்ற ஆர்வம் தற்போதே ரசிகர்களுக்கு வந்து விட்டது.

தற்போது வெளியான இப்படத்தின் பாடல்களும் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப, பல ரேடியோ டாப் 10னில் நம்பர் 1 இடத்தில் இந்த பாடல்கள் உள்ளன.

இந்தப்படம் மே மாதம் 6ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும், தமிழகத்தில் 24 படம் ரிலிஸாகி அடுத்த 10 நாட்களில் தேர்தல் வருவகின்றது, அதனால் இதன் வசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.