7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி

7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி

36

ஈரான், சிரியா உள்பட 7 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோருக்கு 90 நாட்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்க அமெரிக்காவின் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த விதிமுறைகளை 120 நாட்களில் அமல்படுத்த டிரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவோர் நாட்டுக்கும், மக்களுக்கும், அச்சுறுத்தலாக இருக்க கூடாது என்பதால் அகதிகள் மறுவாழ்வு திட்டத்தில் கடுமையான விதிமுறைகளை நடைமுறை படுத்துவது அவசியம் என்று டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முஸ்லீம்களை குறிவைத்து எடுக்கப்படும் நடவடிக்கை என்று அமெரிக்க சமூக சுதந்திர ஒன்றியத்தின் நிர்வாக இயக்குநர் அந்தோணி ரோமிரோ, முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் நாடுகளை குறிவைத்து டிரம்பின் நடவடிக்கை அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY