Home World News போலீசாருக்கு உயர்ரக, அதிநவீன ஆயுதங்கள் வழங்க டிரம்ப் அரசு திட்டம்

போலீசாருக்கு உயர்ரக, அதிநவீன ஆயுதங்கள் வழங்க டிரம்ப் அரசு திட்டம்

11

அமெரிக்காவில் போலீசாருக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அண்மையில் சார்லோட்டஸ்வில் என்ற இடத்தில் வெள்ளை நிற ஆதரவாளர்களால் அரங்கேறிய வன்முறையை போலீசார் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டபோது, போலீசார் வசம் உயர் ரக ஆயுதங்கள் இல்லாததே காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா ஆட்சியில், கையெறி குண்டுகள், உயர்ரக நவீன ஆயுதங்கள், ஆயுதங்கள் சுமந்து செல்லும் வாகனங்களை போலீசாருக்கு வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டிருந்தது.

முந்தைய அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து மாற்றி அமைக்க திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Posts