கோலிவுட் நடிகைகளை மிரள வைத்த டிவி சீரியல் நடிகை ப்ரியா!

கோலிவுட் நடிகைகளை மிரள வைத்த டிவி சீரியல் நடிகை ப்ரியா!

35

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் 2016ம் ஆண்டில் ரசிகர்களின் மனம் கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தமன்னா இரண்டாம் இடத்திலும், சமந்தா மூன்றாம் இடத்திலும், நான்காவது இடத்தில் ஏமி ஜாக்சனும், 5வது இடத்தில் ஸ்ருதி ஹாஸனும், காஜல் அகர்வாலின் பெயர் 6வது இடத்தில் உள்ளது.

கீர்த்தி சுரேஷுக்கு 7வது இடமும், ராதிகா ஆப்தேவுக்கு 8வது இடமும், அனுஷ்காவுக்கு 9வது இடமும், த்ரிஷாவுக்கு 10வது இடமும் கிடைத்துள்ளது.

கல்யாணம் முதல் காதல் வரை டிவி தொடர் மூலம் பிரபலமான ப்ரியா பவானி சங்கருக்கு மனம் கவர்ந்த நடிகைகள் பட்டியலில் 23வது இடம் கிடைத்துள்ளது. ப்ரியா நடிப்பை விட்டுவிட்டாலும் அவரை மீண்டும் நடிக்க வருமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஒரு சீரியல் மூலம் இப்படி பிரபலமானதும், மனம் கவர்ந்த 25 நடிகைகள் பட்டியலில் இடமுன் கிடைத்துள்ளதால், ப்ரியாவை பார்த்து கோலிவுட் நாயகிகள் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY