Home Tamil Breaking News உதயநிதி ஜோடியாக நடிக்கும் மஞ்சிமா மோகன்

உதயநிதி ஜோடியாக நடிக்கும் மஞ்சிமா மோகன்

599

Manjima Mohan

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சுசீந்திரன் இயக்கும் படத்தை தயாரிக்கிறது. இதில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறனர். கதானாயகியாக மலையாள மஞ்சிமா மோகன் நடிக்கின்றார்.

இவர் தற்போது தமிழில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். உதயநிதி இந்தப்படம் பற்றி கூறுகையில்

இயக்குனர் சுசீந்திரன் படம் பற்றி சொன்னபோது அந்த வார்த்தைகள் பிடித்திருந்தது. இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றதால், படத்துக்கு உடனே பூஜை போட்டுவிட்டோம். இன்னும் முழு கதை முடிவாகவில்லை.

இப்போது மனிதன் படத்தில் நடித்து வருகிறேன். இதன் ஷூட்டிங் முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். அதற்குப் பிறகுதான் அந்தப் படத்தில் நடிப்பேன். அனேகமாக மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்கும் என்று உதயநிதி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here