Home Tamil Cinema News சசி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி!

சசி இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி!

121

Udhayanidhi-Stalin-Stills-9

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சசி, உதயநிதியை வைத்து படம் இயக்குவதாக செய்திகள் வெளியானது.

சமீபத்தில் உதயநிதியை சந்தித்து சசி ஒருவரி கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதை உதயநிதிக்கு பிடித்துவிட்டதால் அவரே அந்த படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவல் குறித்து இருவர் தரப்பிலும் உறுதி செய்யப்படவில்லை. ‘பிச்சைக்காரன்’ வெற்றி பெற்றதால் மீண்டும் விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்தில் இணைய இருதரப்பிலும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் சசியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here