Home Tamil Cinema News முன்னணி நடிகர்கள் சம்பளம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அதிரடி கருத்து

முன்னணி நடிகர்கள் சம்பளம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அதிரடி கருத்து

199

feature

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் எனக்கு க்ரைம் த்ரில்லர், வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமெல்லாம் செய்ய ஆசையாக இருக்கிறது.

புதுமையான கதைகளில் நாம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன், செய்வேன். அதே போல தொழில்நுட்ப கலைஞர்கள், பெரிய நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

திரையுலகம் நிறைய நஷ்டத்தில் போய் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம். படங்கள் நஷ்டமாகிக் கொண்டே இருக்கின்றன. பெரிய நடிகர்களின் சம்பளமும், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமும் கூடிக் கொண்டே போகிறது என்று கூறியுள்ளார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு உதயநிதி நடிப்பில் கெத்து படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்த ப்ரோமோஷன் வேலைகள் தற்போது நடந்து வருகையில் உதயநிதி நடிகர்கள் சம்பளம் பற்றி கூறியிருப்பது முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here