Home Tamil Breaking News இந்தியா வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை

இந்தியா வரும் பயணிகளுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை

29

லண்டன் : அரியானா மாநிலத்தில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் சிங் தன் ஆசிரமத்தில் உள்ள இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என நேற்று கோர்ட் அறிவித்தது. இதனையடுத்து சாமியார் குர்மீத் ராம் கைது செய்யப்பட்டதால் அரியானா, பஞ்சாப்பில் வன்முறை வெடித்துள்ளது.

அரியானா – பஞ்சாப் மாநிலங்களில் சாமியாரின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, வரும் 28-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட இருப்பதால் கலவரங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பு கருதி டில்லியில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு பயணம் செய்யும் பிரட்டன் நாட்டினர் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.