Home Tamil Cinema News ‘உறுமீன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘உறுமீன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

90

urumeen

பாபி சிம்ஹா, கலையரசன் மிரட்டல் நடிப்பில் வெளிவரவுள்ள உறுமீன் படத்தில் ரேஷ்மி மேனன் கதானாயகியாக நடித்துள்ளார் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்த பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஆகிய இருவரும் காதலர்கள் ஆனார்கள். முதலில் இதனை வெளியிடாத இவர்கள் தற்போது வெளிப்படயாக அறிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி சென்னையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. பாபி சிம்ஹா, ரேஷ்மி காதலால் இந்தப் படத்தின்மீது ஒருப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்தியுள்ள உறுமீன் திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.