Home Tamil Cinema News மழை வெள்ளத்திலும் துணிந்து ஓடும் – உறுமீன்

மழை வெள்ளத்திலும் துணிந்து ஓடும் – உறுமீன்

100

image

பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன், அப்புக்குட்டி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் உறுமீன். சென்னையில் மழை வெள்ளத்தால் ரஜினி முருகன், ஈட்டி போன்ற படங்கள் வெளியிடாமல் தள்ளிவைக்கப்பட்ட போதிலும், துணிந்து உறுமீன் படத்தினை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். சுமார் 6 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் உறுமீன் படத்தில் நிஜக் காதலர்களான பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் இணைந்து நடித்திருக்கின்றனர்.

சென்னயில் படத்தின் வெளியீடு பாதிக்கப்பட்டிருந்தாலும், மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் திரையறங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. உறுமீன் படம் துணிச்சலுடன் வெளியிடப்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.