Home World News இந்தியா – பாக்., நேரடி பேச்சு: அமெரிக்கா வலியுறுத்தல்

இந்தியா – பாக்., நேரடி பேச்சு: அமெரிக்கா வலியுறுத்தல்

20

வாஷிங்டன் : ‘காஷ்மீர் பிரச்னையில், இந்தியாவும், பாகிஸ்தானும், நேரடியாக பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காண வேண்டும்’ என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜம்மு – காஷ்மீர் பிரச்னை தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர், ஹெதர் நர்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காஷ்மீர் விவகாரத்தால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இதுதொடர்பாக, இரு நாடுகளும் நேரடி பேச்சு நடத்த வேண்டும். ஆப்கானிஸ்தான் விவகாரத்துடன், காஷ்மீர் பிரச்னையை இணைத்து, அணுக முடியாது. காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை.

ஆப்கானிஸ்தான் பிரச்னை, தெற்காசிய விவகாரமாக கையாள முடிவு செய்ப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில், பாகிஸ்தானை தவிர்த்து, இந்தியா போன்ற பிற தெற்காசிய நாடுகளுடன் சேர்ந்து செயல்படவுள்ளோம். ஆப்கானிஸ்தானை, பயங்கரவாதம் இல்லாத நாடாக மாற்றிக் காட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.