Home Tamil Cinema News ஹீரோவாகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன் என நடிகர் வடிவேல் பேட்டி

ஹீரோவாகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன் என நடிகர் வடிவேல் பேட்டி

311

VADIVELU

நடிகர் விஷால், கத்தி சண்டை என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதனை சுராஜ் இயக்கியிருகிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது.

விழாவில் வடிவேல் பேசும்போது, ‘நான் கதாநாயகனாகவும் நடிப்பேன். நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன். இனிமேல் இரண்டு வழிப்பாதை தான். நிறைய படங்களில், படம் முழுக்க வருகிற மாதிரி நகைச்சுவை வேடங்களில் நடிக்க இருக்கிறேன்.

இந்த படத்தின் டைரக்டர் சுராஜ், எனக்கு தகுந்த மாதிரி நடிப்பதற்கு தீனி போடுவார். அதனால் நம்பிக்கையுடன் நடிக்கிறேன். படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று வடிவேல் பேசினார். விழாவில் நடிகர் சூரி, டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர் எஸ். நந்தகோபால் ஆகியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here