Home Tamil Cinema News பிரேமம் நிவின் பாலிக்கு ஜோடியாகும் வரலட்சுமி

பிரேமம் நிவின் பாலிக்கு ஜோடியாகும் வரலட்சுமி

81

Nivin-Pauly-Varalaxmi

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியிருந்தாலும், மலையால பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான ரசிகர்களைப் பெற்றவர் நிவின் பாலி. இவரின் நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ தமிழ்நாட்டில் 250 நாட்களைத் தாண்டி சாதனை படைத்தது.

அவரது தொடர் வெற்றிகள் காரணமாக முன்னணி மலையாள நடிகர்களில் ஒருவராக வலம்வருகிறார். இந்த நிலையில் மிஷ்கினின் உதவியாளர் கவுதம் இயக்கும் புதிய படத்தில், நிவின் பாலி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிவின் பாலியின் இந்த 2 வது தமிழ்ப்படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக வரலட்சுமி நடிப்பில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இதனால் வரலட்சுமி-நிவின் பாலி இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்னும் செய்தி, 2 மாநில ரசிகர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here