Home Tamil Movie Reviews வேதாளம் – விமர்சனம் 2015

வேதாளம் – விமர்சனம் 2015

460
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating
3

இயக்குநர்: சிவா

ஒளிப்பதிவு: வெற்றி

இசை: அனிருத்

நடிகர்கள்: அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாஸன், தம்பி ராமையா, ராகுல்           தேவ், சூரி.

அஜித்தின் 56 -வது படமான வேதாளம் அமர்க்களமாக வெளியாகியிருக்கிறது. திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தால் திணறுகின்றன. அஜீத்தை, அவரது ரசிகர் பலத்தை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட பக்கா கமர்ஷியல் படைப்பு தான் வேதாளம்.

11-1447233005-vedalam57678

இத்தாலியில் தொடங்குகிறது படம். மிகப்பெரிய டான் ராகுல் தேவ். அவரைப் பிடிக்க முயற்சி செய்யும் ராணுவ அதிகாரியை ராகுல் தேவ் கொலை செய்கிறார். அப்போது, தமிழ் சினிமா பேசத் தொடங்கியது முதல், படங்களில் இடம்பெற்று வரும் வசனத்தை அந்த அதிகாரி உதிர்க்கிறார். “உன்னைக் கொல்ல ஒருவன் வருவாண்டா.” அதற்கு அடுத்து சென்னையிலிருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜீத்.
கால் டாக்சியில் பயணிக்கும்போது டிரைவர் மயில்சாமியின் நட்பு கிடைக்க, அவர் உதவியுடன் கொல்கத்தாவில் தங்குகிறார்கள். கூடவே அஜீத்துக்கு கால் டாக்சி டிரைவர் வேலையும் கிடைக்கிறது.
1447149957-9954அஜீத் ஒரு முறை சவாரி போகும்போது வக்கீல் ஸ்ருதி ஹாஸன் பயணிக்கிறார். அஜீத்தின் வெகுளித்தனத்தைப் பார்த்த அவர், ஒரு வழக்கில் பொய் சாட்சியாக கூட்டிப் போகிறார். ஆனால் இவர் பொய் சாட்சி என்பது அம்பலமாகிவிட, ஸ்ருதி வக்கீல் தொழிலைப் பார்க்க முடியாத நிலை. இந்த நிலையில் லட்சுமி மேனன் மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின். அஜீத் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஒரு கிரிமினலை அவர் போலீஸில் காட்டிக் கொடுக்க, அஜித்தை அவனது ஆட்கள் கடத்துகிறார்கள். நீங்க என்னை கடத்தலைடா, நானாகத்தான் வந்தேன் என்று அவனை போட்டுத்தள்ளுகிறார். அந்த கிரிமினல் யார் என்றால், ராகுல் தேவின் தம்பி. அதை ஸ்ருதி ஹாஸன் பார்த்துவிட, அந்த கட்டத்தில் அஜீத் தன்னைப் பற்றிச் சொல்கிறார். அப்போதுதான் லட்சுமி அவர் தங்கையே இல்லை எனத் தெரிகிறது. அஜீத் யார், அவர் ஏன் கொலை செய்கிறார்? லட்சுமி மேனனுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன? என்பதை மசாலா மணத்துடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சிவா.
11-1447232994-vedalam68889சாது, சண்டைக்காரன் என்று இருவிதமான பாவங்களை காண்பிக்க அஜித்துக்கு வாய்ப்பு. ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் தெறிக்கவிடலாமா முகபாவத்துக்கு கைத்தட்டி ஓய்கிறது ரசிகக் கூட்டம்.
நீ கெட்டவன்னா, நான் கேடு கெட்டவன்… போன்ற வசனங்களை அஜீத் பேசும் போதெல்லாம் காது கிழிகிறது அவரது ரசிகர்களின் கைத் தட்டல்களில். இந்த மாதிரி ஆக்ஷன் படங்களில் ஒரு கதாநாயகிக்கு என்ன வேடமோ அதுதான் ஸ்ருதி ஹாஸனுக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார்.
தங்கையாக வரும் லட்சுமி மேனனுக்கு நல்ல வாய்ப்பு. இது போன்ற வேடங்களை ஊதித் தள்ளுபவர் லட்சுமி. அதுவும் அஜீத்துடன் வாய்ப்பு என்பதால் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
11-1447232988-vedalam6878அஜித் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்து படம் எடுக்கையில் திரைக்கதையில் எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும்? தம்பியை கொன்றது யார் என்று ராகுல் தேவ் ஆள், படை, அம்பு சகிதம் நவீன தொழில்நுட்பத்துடன் அஜித்தை தேட, அவரோ எந்த கஷ்டமும் இல்லாமல் ராகுல் தேவை பழிவாங்கிவிட்டுப் போகிறார். பில்டப்புக்கு ஏற்ற பின்னணி கொடுத்திருக்கலாம்.
வெற்றியின் ஒளிப்பதிவில் இத்தாலியை ரசிக்க முடிகிறது. சென்னை, கொல்கத்தா காட்சிகளுக்கு அவர் காட்டியிருக்கும் வித்தியாசம் அருமை. அனிருத்தின் இசையில் ஆலுமா டோலுமா, வீர விநாயகா பாடல்கள் அஜீத் ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைக்கின்றன.
11-1447233037-vedalam111எங்கோ உள்ள ஸ்ருதி ஹாஸன், அந்தக் கொலையை எப்படி துல்லியமாகப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. அந்த ப்ளாஷ்பேக் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருந்தால் வேதாளத்தின் இரண்டாம் பாதி மிரட்டலாக இருந்திருக்கும்.
தயாரிப்பாளர்களின் பெரிய பட்ஜெட், அஜித் போன்ற பெரிய ஹீரோ, சிறந்த டெக்னீஷியன்கள் என பெரும் பலம் கையிலிருந்தும் அதைச் சரியாகப் உபயோகப்படுத்தவில்லை இயக்குநர் சிவா. இருப்பினும் அஜித் நடிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
வேதாளம் – தெறி ஹிட்