Home Tamil Movie Reviews வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் – விமர்சனம்

715
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

இயக்குனர் எஸ்.எழிலின் இயக்கத்தில், வளரும் நாயகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில், நிக்கி கல்ராணி, சூரி, நரேன், ரவி மரியா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் உடன் நடிக்க வெளிவந்திருக்கும் முழு நீள காமெடி கமெர்ஷியல் படம் தான் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்'.

3
இயக்கம்: எஸ். எழில்
ஒளிப்பதிவு: சக்தி
இசை: சத்யா
தயாரிப்பு: விஷ்ணு விஷால், எஸ். எழில்
நடிகர்கள்: விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி, நரேன், ரவி மரியா, ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன்.

இயக்குனர் எஸ்.எழிலின் இயக்கத்தில், வளரும் நாயகர் விஷ்ணு விஷால் தயாரிப்பு மற்றும் நடிப்பில், நிக்கி கல்ராணி, சூரி, நரேன், ரவி மரியா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் உடன் நடிக்க வெளிவந்திருக்கும் முழு நீள காமெடி கமெர்ஷியல் படம் தான் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.

papparamittai-video-song-velainu-vandhutta-vellaikaaran-ft-vishnu-vishal-nikki-galrani-hd

மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, வெள்ளக்காரத்துரை என தொடர் ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருபவர் தான் இயக்குனர் எழில்.

ரோபோ ஷங்கர் எம்.எல்.ஏவாக தன் ஊரில் இலவச திருமணம் செய்து வைக்கின்றார். இதில் ஒருவர் மட்டும் ஓடி போக, மானம் போக கூடாது என்று சூரியை வலுக்கட்டாயமாக புஷ்பா என்பவருக்கு நாடக கல்யாணம் செய்து வைக்கின்றனர்.

இதனால், அவருக்கு அடுத்த சில மாதங்களில் தன் மாமன் மகளுடன் நடக்கவிருந்த திருமணம் நிற்கும் நிலை ஏற்படுகின்றது. இதேபோல் விஷ்ணு, நிக்கி கல்ராணி மீது கொண்ட காதலால் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் அப்பாவிடம் ரூ. 10 லட்சம் பணம் வாங்கி ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கிறார்.

velainu-vandhutta-vellaikaaran-movie-stills-24

ரோபோ ஷங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியல்லாமல் போகின்றது. அப்போது அவரை அழைத்து ரூ. 500 கோடி ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா ரோபோ ஷங்கரை துறத்துகிறார். ரோபோ ஷங்கர் ஒரு பெரிய விபத்தில் பழைய விஷயங்களை மறந்து 10 வயதுக்கு திரும்புகிறார்.

இதன்பின் புஷ்பா திருமணம் நாடகம் தான் என சூரி நிரூபித்தாரா? அந்த ரூ. 10 லட்சம் பணத்தை நிக்கி கல்ராணியிடம் விஷ்ணு திருப்பிக்கொடுத்து தன் காதலில் வெற்றி பெற்றாரா? அந்த ரூ. 500 கோடியை ரவிமரியா கண்டுப்பிடித்தாரா? இவை அனைத்திற்கும் மேல் ரோபோ ஷங்கருக்கு பழைய நினைவு திரும்ப வந்ததா? என்பது தான் காமெடியாகவும், கலர்புல்லாகவும்விடை சொல்கிறது வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.

467028-vvv

இப்படக்கதையின் நாயகர் முருகனாக, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாக முத்திரைப் பதித்திருக்கிறார். அதிலும், விஷ்ணு, அயம் வெயிட்டிங் என இண்டர்வெல் பிளாக்கில், அலட்டுவதில் தொடங்கி, ‘இந்த முருகன் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்..’என க்ளைமாக்ஸில் டைட்டில் பில் – டப் கொடுப்பது வரை, லவ், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் … எல்லாவற்றிலும் ரசிகனை சபாஷ் சொல்ல வைத்திருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாது தகுதி அடிப்படையில் காவல்துறையில் வேலைக்கு சேர ஆசைப்படும் கதையின் நாயகி அர்ச்சனா வாக நிக்கி கல்ராணி, கலக்கல் ராணி…. எனுமளவிற்கு கலக்கி இருக்கிறார் படம் முழுக்க.

Peigal-Jakkirathai

இப்படத்தில் எதிர்படும் எல்லோராலும், புஷ்பா புருஷன் தானே.. நீங்க? என கேட்கப்படும் புஷ்பா புருஷனாக சூரி, படம் முழுக்க காமெடி யில் கலக்கியிருக்கிறார். சர்க்கரை, சர்க்கரைன்னு இனிக்க, இனிக்ககூப்பிட்டு சாக்கடையில தள்ளி புட்டியேடா… மாப்ள.. என விஷ்னுவை பார்த்து படத்தில் புலம்பும் இடத்தில், தியேட்டர் சிரிப்பொலியால் திமிலோகப் படுகிறது. அலோ மிஸ்டர் புஷ்பா புருஷா.. கீப் இட் அப்.

கோமா ஸ்டேஜில் இருந்து பத்து வயது மனநிலைக்கு வரும் ஜாக்கெட் ஜானகிராமன் எம்எல்ஏ – ரோபோ சங்கர், சக சாராய எம்எல்ஏ – நரேன், அமைச்சரின் அடாவடி மைத்துனர் பூதம் – ரவி மரியா, பேய் பங்களா ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அமைச்சரின்டாக்டராக வரும் டைரக்டர் சரவண சுப்பைய்யா, ஞானவேல், வையாபுரி, அஸ்வின், பாவா லட்சுமணன், கதா. க. திருமாவளவன், ரிஷா… ஆகிய எல்லோரும் காமெடியில் ரசிகனுக்கு ஆனந்த கண்ணீர் வர விட்டிருக்கின்றனர் என்றால் மிகையல்ல…. அதிலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனுடன் ஒத்தப் பாட்டுக்கு செம காமெடி பேய்குத்து போடும் ரிஷாவும் சூப்பர்.

E73A7978-copy

சத்யாவின் இசை என்று சொன்னால் தான் தெரியும் போல, தெரியாதவர்கள் கண்டிப்பாக டி.இமான் என நினைத்து விடுவார்கள். செல்லாவின் நம்மூர் அரசியலை காமெடியாக பிரதிபலிக்கும் மூலக் கதை எழிச்சூர் அரவிந்தனின் நறுக் காமெடி வசனங்கள், ஆனந்த லிங்க குமாரின் பக்கா படத்தொகுப்பு, சக்தியின் ஓவிய ஒளிப்பதிவு, உள்ளிட்டவை எஸ்.எழிலின் எழுத்து, இயக்கத்திற்கும், இப்படத்திற்கும் பெரும் பலம்.

மொத்தத்தில் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” – வேலையில் கரெக்ட்டா இருந்திருக்கிறான்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here