Home Tamil Cinema News வேலையில்லா பட்டதாரி வில்லன் ‘அமிதாஷ்’ ஹாலிவுட்டுக்கு செல்கிறார்

வேலையில்லா பட்டதாரி வில்லன் ‘அமிதாஷ்’ ஹாலிவுட்டுக்கு செல்கிறார்

147

BtFXcNhCAAAV6T_தனுஷ் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா
பட்டதாரி படம் தமிழகமெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் அமிதாஷ் (Amitash Pradhan). கதைக்கு தகுந்த அவரது நடிப்பு திரையுலகில் பரவலாக பேசபட்டது. அவரது அமுல் பேபி நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார்.

இந்நிலையில் இவருக்கு ‘ஹார்ட்பீட்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் டோனே அட்லெர் இதற்கு முன் நடனம் சார்ந்த படமான ‘சேவ் த டான்ஸ்’ மற்றும் ‘ஸ்டெப் அப்’ படங்களை எடுத்தவர்.

அமிதாஷின் நடன வீடியோவை பார்த்து அப்படத்தின் நடிகர்களின் தேர்வு இயக்குனர் நளினி ரத்னம் இவரை தேர்வு செய்துள்ளார். மேலும் அமிதாஷ் பல முன்னணி ஹாலிவுட் நடன இயக்குனர்களிடம் பணியாற்றியதால் தான் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here