கபாலி படம் பார்ப்பதற்காக ஊழியர்களுக்கு லீவு விட்ட வெங்கட்பிரபு!

கபாலி படம் பார்ப்பதற்காக ஊழியர்களுக்கு லீவு விட்ட வெங்கட்பிரபு!

49

chennai-600028-part-2

ரஜினியின் கபாலி படம் நாளை மறுதினம் ரிலீசாகிறது. ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், ரசிகர்கள் முதல்நாளே கபாலியைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

இதனால் கபாலி வெளியாகும் தினம் சில நிறுவனங்கள் தாங்களே முன்வந்து தங்கள் ஊழியர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவித்து வருகின்றன. அந்தவகையில், பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபுவும் தனது தயாரிப்பு நிறுவன ஊழியர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையை அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘வரும் வெள்ளிக்கிழமை கபாலி படம் ரிலீசாவதால் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும், உடல் நலம் சரியில்லை, மொத்தமாக ஊழியர்கள் விடுப்பு எடுப்பது, போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாவது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும்’ இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகர்களில் வெங்கட்பிரபுவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி கபாலி பட இயக்குநர் ரஞ்சித், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். எனவே ‘கபாலி’ ரிலீசுக்காக அவர் தனது நிறுவனத்திற்கு விடுமுறை அறிவித்துள்ளார் என்று கூறுகிறார்கள் அவரது ஊழியர்கள்.

 

NO COMMENTS

LEAVE A REPLY