Home Tamil Cinema News வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார் வெங்கட் பிரபு

வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார் வெங்கட் பிரபு

139

why-venkat-prabhu

இயக்குனர் வெங்கட் பிரபு கௌதம் மேனன் தயாரிப்பில் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டுவந்தது. இதற்கு தற்போது அவர் முற்று புள்ளி வைத்துள்ளார்.

இது பற்றி வெங்கட் பிரபு கூறுகையில், கௌதம் மேனன் தயாரிப்பில் படம் இயக்கவிருப்பது உண்மை தான், ஆனால், கண்டிப்பாக அது சென்னை-28 இரண்டாம் பாகம் இல்லை. அந்தப்படத்தை இயக்குவது தொடர்பாக ஐடியாவும் உள்ளது. ஆனால் தற்போதைக்கு ஒரு புதுக்கதையை தான் இயக்கவுள்ளேன் என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு மங்காத்தா படத்திற்கு பிறகு முன்னணி இயக்குனர்கள் என்ற வரிசைக்கு வந்து விட்டார். ஆனால், பிரியாணி, மாசு ஆகிய அடுத்தடுத்த படங்களின் தோல்வி வெங்கட் பிரபுவின் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கல் கண்டுள்ளது.

இதனால் அவர் தனது அடுத்தடுத்த படங்கள் தோல்வியடையாமல் இருக்க புதிய கதைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்திவருகிறார்.