Home Tamil Cinema News விட்ட இடத்தை பிடிக்க திரும்பவும் ஆரம்பத்திற்கே சென்ற வெங்கட் பிரபு

விட்ட இடத்தை பிடிக்க திரும்பவும் ஆரம்பத்திற்கே சென்ற வெங்கட் பிரபு

150

venkat-prabhu

வெங்கட் பிரபு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும் சென்னை 28 என்ற நண்பர்கள் கதையம்சம் கொண்ட வெற்றிப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகமானார். இவர் அந்தப்படத்திற்கு பிறகு நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

அவர் கடைசியாக இயக்கிய மாஸ் படம் இவருக்கு சரியான வெற்றியை தேடித்தரவில்லை. அதனால் தனது அடுத்த படத்தின் மீது அதிக கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் தற்போது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாராக இருக்கும் இப்படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here