Home Tamil Cinema News வெங்கட் பிரபு பாடலாசிரியராக அவதாரம் எடுக்கிறார்

வெங்கட் பிரபு பாடலாசிரியராக அவதாரம் எடுக்கிறார்

69

Venkat Prabhu Turns Lyricist in Chennai 28 Part 2

இயக்குனர் வெங்கட் பிரபு, சூர்யாவின் மாஸ் படத்தை தொடர்ந்து புதிய படம் இயக்கும் வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டுவந்தார். நல்ல கதை கிடைக்காததால் தற்போது அவர் முன்னர் இயக்கிய சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர் பட்டாளம் மீண்டும் இணைகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தை தயாரித்து இயக்குவது மட்டுமின்றி, வெங்கட் பிரபு பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார். படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் இவர் பாடல்வரிகள் எழுதியுள்ளார்.

தற்போது சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், பாடல்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.