Home Tamil Cinema News ‘தடம்’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘தடம்’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

18

இப்படத்தின் அறிவிப்பு வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அருண் விஜய்-க்கு ஜோடியாக தான்யா, ஸ்ம்ருதி, வித்யா பிரதீப் என மூன்று ஹீரோயின்ஸாம்.

ஸ்டன்ட் மாஸ்டர் ஃபெஃப்சி விஜயனுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம். இதனை ‘ரேதன் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனம் சார்பில் இந்தர் குமார் தயாரிக்கிறார். க்ரைம் த்ரில்லராக தயாராகிவரும் இதன் கதைக்களம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.

அருண்ராஜ் என்பவர் இசையமைக்கும் இதற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்போஸ்டர்ஸ் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. வெகு விரைவில் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.