Home Tamil Cinema News அரசியல் பற்றிப் பேசும் புரட்சிகரமான படம்..!

அரசியல் பற்றிப் பேசும் புரட்சிகரமான படம்..!

16

சுதேசி பிலிம்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘வெங்கட் சுப்பிரமணி மைக் டெஸ்டிங் 1..2..3’.

ரோ‌ஷன் இந்த படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். ஹர்ஷிதா பன்வர் என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கிறார்.தயாரிப்பாளர்கள் – ரோ‌ஷன், ஜி.ஸ்ரீநிவாசன், கதை, திரைக்கதை, இயக்கம் – முருகேஷ் பாரதி. இவர் இயக்குனர் ஹரியிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர்.

படம் பற்றி ரோஷன் கூறுகையில்: “பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள் ளேன். ஒரு கிராமத்தில் பிறந்து அரசியல் கூட் டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங் களுக்கு மைக் செட் போடும் போது சந்திக்கும் சில பிரச் சினைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கிறது. பிரதமர் மோடி முதல் , சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ, மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படம்பிடித்துள்ளோம்” என்றார்.