Home Tamil Movie Reviews வெற்றிவேல் – விமர்சனம்

வெற்றிவேல் – விமர்சனம்

566
TheNeoTV Tamil Movie Rating
  • Our Rating

Summary

வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார், மியா ஜார்ஜ், நிகிலாவிமல் உள்ளிட்டோர் இணைந்து நடித்து டி.இமான் இசையில், ரவீந்திரன் – அப்துல் லத்தீப் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படமே "வெற்றிவேல்".

3
இயக்கம்: வசந்த மணி
ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்
இசை: இமான்
தயாரிப்பு: ரவீந்திரன்
நடிகர்கள்: சசிகுமார், மியா ஜார்ஜ், பிரபு, சமுத்திரக்கனி, விஜி சந்திரசேகர், தம்பி ராமையா, ரேனுகா, இளவரசு

வசந்த மணி இயக்கத்தில் சசிக்குமார், மியா ஜார்ஜ், நிகிலாவிமல் உள்ளிட்டோர் இணைந்து நடித்து டி.இமான் இசையில், ரவீந்திரன் – அப்துல் லத்தீப் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படமே “வெற்றிவேல்”.

vetrivel-movie-still

நாடோடிகள் போன்ற படன்ல் நட்பு, காதல் என கலக்கிய சசிக்குமார், தாரை தப்பட்டை படத்தில் ஆக்ரோசமாக நடித்தார். ஆனால், சசிகுமார் ரூட் இது இல்லையே, காதலுக்கு உதவி செய்ய வேண்டும், கஷ்டப்படுவோருக்கு உதவ வேண்டும், நாட்டிற்கு குறிப்பாக இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை கருத்து குரலில் சொன்னால் தானே அது சசிகுமார் படம். அந்த சசிகுமார் எப்போது வருவார் என காத்திருந்த அனைவருக்கும் வெற்றிவேல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக பணியாற்றும் மியா ஜார்ஜை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.

ஒருகட்டத்தில் மியாவும் சசிகுமாரின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டுகிறார். ஒருநாள் தனது சொந்த ஊருக்கு செல்கிறார் மியா ஜார்ஜ். அவர் திரும்பி வருவதற்குள் சசிக்குமாரின் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.

Vetrivel Movie Stills (3)

வெளியூரில் படிப்பு முடித்துவிட்டு சொந்த ஊருக்கு வரும் சசிகுமாரின் தம்பி ஆனந்த் நாக், அந்த ஊர் தலைவரான பிரபுவின் மகளை காதலிக்கிறார். அவளும் இவரை காதலிக்கிறாள்.

இவர்களது காதல் சசிகுமாரின் வீட்டுக்கு தெரியவரவே, பிரபுவின் வீட்டுக்கு சென்று பெண் கேட்கிறார் இளவரசு. ஆனால், சாதி, அந்தஸ்தை காரணம் காட்டி பிரபு இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

இந்த விஷயம் சசிகுமாருக்கு தெரியவரவே, தம்பியின் காதலுக்கு உதவி செய்ய நினைக்கிறார். ஊர் திருவிழாவின் போது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கடத்துகிறார்.

ஆனால், கடைசியில் பார்க்கும்போது இவர்கள் பிரபுவின் மகளுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணான நிகிலாவை கடத்தி வந்துவிடுகின்றனர். அவள், பிரபுவின் தங்கையான விஜி சந்திரசேகரின் மகனுக்கு நிச்சயிக்கப்பட்டவர்.

தவறு நடந்துவிட்டதை நிகிலாவுக்கு விவரிக்கிறார் சசிகுமார். அவளும் அதை ஏற்றுக்கொண்டு ஊர்க்காரர்களுக்கு அதைச் சொல்லி புரிய வைப்பதாக அழைத்து செல்கிறார்.

ஆனால், நிகிலா யாரோ ஒருவனுடன் ஓடிவிட்டதாக கூறி, விஜி சந்திரசேகர் நிகிலாவின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். அவமானத்தால் அவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

Tamilcinemastills.com-Vetrivel-Movie-Stills-11-750x350

இதனால் நிகிலாவின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. போலீஸ் விசாரணையில் நிகிலா, சசிகுமாருடன் விருப்பத்தின் பேரிலேயே சென்றதாக கூறி அவரை மாட்டிவிடுகிறார். இதனால், என்னசெய்வதென்று முழிக்கும் சசிகுமாரிடமே, நிகிலாவை அனுப்பி வைக்கின்றனர் போலீசார். இறுதியில், சசிகுமார் நிகிலாவுக்கு வாழ்க்கை கொடுத்தாரா, மியா ஜார்ஜ் உடன் சேர்ந்தாரா? தம்பியின் காதலை சேர்த்து வைத்தாரா, என்பதே மீதிக்கதை.

இந்த சசி தான் சார் எங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு ஊருக்கு ஒரு எம்.ஜி.ஆராக வலம் வருகின்றார். இதுநாள் வரை நண்பர்களின் காதலுக்கு உதவி செய்த சசி, இதில் தன் தம்பியின் காதலுக்கு உதவி செய்கிறார். தன் தவறை உணர்ந்து நிகிலாவை திருமணம் செய்தாலும், அவரின் விருப்பத்தை கேட்காமலேயே அறிந்து அதன் படி நடந்துக்கொள்வது என குடும்பங்கள் கொண்டாடும் கதாபாத்திரம்.

மியா ஜார்ஜ் சசியுடன் பல நேரங்களில் தொலைப்பேசியில் பேசுகிறார். அவ்வளவு தான் பெரிதும் நடிக்கும் வாய்ப்பு இல்லை, சசியின் நிலை தெரிந்து அவர் காதலை விடும் இடத்தில் மனதில் நிற்கிறார். நிகிலா, வருஷா இருவருமே மிகைப்படுத்தி நடிக்காமல் அவர்கள் கதாபாத்திரத்தில் மிக யதார்த்தமாக நடித்து செல்கின்றனர்.

படத்தில் இவர்கள் அனைவரையும் விட எல்லோரையும் கவருவது பிரபு, விஜி தான். பிரபு மிகவும் சாந்தமாக இருந்தாலும் கௌரவம் காரணமாக முடிவு எடுத்து பின் தன் தவறை உணர்ந்து வருந்தும் இடத்திலும் அப்ளாஸ் அள்ளுகிறார். ஆனால், படம் முழுவதுமா தவறான முடிவா எடுத்து வருவது? விஜி இவரை தவிர வேறு யாரும் இதுபோல் மிரட்டலாக நடிக்க முடியாது. தன் அண்ணனை பழி வாங்க வேண்டும் என்று கடைசி வரை தன் திமிரை விடாமல் கலக்குகிறார்.

Vetrivel-movie-stills-1

அவங்கள்ளம் பசங்களுக்கு பாடம் சொல்லி வளர்க்கிறாங்க.. நாங்க பயிறுக்கு உரம் போட்டு வளர்க் கிறோம் நாங்களும் படிக்கலைன்னாலும் வாத்தியார் தான். அவள் என் காலை மிதித்து காதலை பதித்து விட்டாள், ‘மண் உரத்துல ஆரம்பிச்சு மலையாளத்துல சம்சாரிக்ர வரைக்கும் போயாச்சு’ எனும் பன்ச் டயலாக்குகளுடன் தன் பாணியில் கிராமத்தானாக சசிக்குமார் வாழ்ந்திருக்கிறார் வழக்கம் போலவே!

உங்களுக்கு மண்ணை பத்தி டீடெயில் வேணுமா, இல்லை என்னைப் பற்றி வேண்டுமா? ‘என எடுத்த எடுப்பிலேயே ‘பளிச்’ என கேட்கும் ஓருநாயகி ஜனனி, மியா ஜார்ஜ், நிகிலா விமல் உள்ளிட்ட நாயகியர் எல்லோரும் கிளாமர் கக்கியிருக்கின்றனர்.
இது மொபைல்ல பேசுற விஷயமல்ல, முகத்தைப் பார்த்து பேசுற விஷயம் என வெட்கப்படும் காட்சிகளில் ஜனனி யாக வரும் நாயகி… அருமை.

தம்பி ராமையா வரும் காட்சிகள் வழக்கம்போல் கலகலப்பு. விஜி சந்திரசேகர் வில்லியாக அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். கிராமத்து பாணியில் ஒரு நல்ல குடும்பப் பாங்கான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தமணி. வழக்கமான சசிகுமார் படங்களிலிருந்து இப்படத்தை மிகவும் மாறுபட்டு எடுத்திருக்கிறார்.

டி. இமான் இசையில் ’உன்ன போல’ பாடல் ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை கொஞ்சம் சத்தம் அதிகம். A.L.ரமேஷின் படத்தொகுப்பு பக்கா. கதிரின் ஒளிப்பதிவு தஞ்சையை அழகாக படம் பிடித்துள்ளது.

மொத்தத்தில் “வெற்றிவேல்” – குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here