Home Tamil Cinema News ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கும் வித்யுலேகா

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட்டை இழந்து தவிக்கும் வித்யுலேகா

127

Vidyulekha1

நடிகை வித்யுலேகா தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர். இவர் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா நகருக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு இவர் தங்கியிருந்த ஹோட்டல் லாபியில், இவருடைய பேக்கை யாரோ திருடிவிட்டனர்.

பாஸ்போர்ட், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், பணம் ஆகியவை அதில் இருந்திருக்கிறது. இதனால் செய்வதறியாது தவித்துப்போன வித்யுலேகா, டுவிட்டர் மூலம் பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் ஆகியோரிடம் உதவி கோரினார்.

இதனை அறிந்த நடிகை குஷ்பூ, நடிகர் கருணாகரன், பின்னணிப் பாடகர் க்ரிஷ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அவருக்கு டுவிட்டர் மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், நாளை இந்திய தூதரகத்துக்குச் வித்யுலேகா செல்லவிருக்கின்றார்.