Home Tamil Cinema News விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா

விஜய்க்கு மனைவியாக நடிக்கும் சமந்தா

148

Vijay 59 Stills 11

விஜய் தற்போது அட்லி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய்-எமிஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருகின்றனர். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடித்து வருகிறார்.

முதல் முறையாக விஜய் படத்தில் சமந்தா அம்மாவாக நடிக்கிறார். விஜய்க்கு அல்ல ஒரு குழந்தைக்கு! படத்தில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் சமந்தா. சரி, அந்தக் குழந்தை யாரு தெரியுமா? நடிகை மீனா பெற்றெடுத்த நைனிகா. இந்தப் படத்தில் நடிகர் பிரபு – ராதிகாவுக்கு முக்கிய வேடம் தந்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட முடிவு செய்து பணியாற்றி வருகின்றனர்.

விஜய் 59 படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர்கள் வரும் 29-ம் தேதி வெளியாகவிருக்கின்றன. கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்கின்றார்.