கோடிகளில் விலைபோன விஜய் 60 படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை

கோடிகளில் விலைபோன விஜய் 60 படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை

126

விஜய் 60

நடிகர் விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இன்னமும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. தற்போதைக்கு விஜய் 60 என்று கூறுகிறார்கள். படத்தை பெங்கல் திருநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமையை ஐஎப்ஏஆர் என்ற நிறுவனம் ரூ.6.25 கோடிக்கு வாங்கியுள்ளது. கேரளாவில் முதல் முறையாக விஜய்யின் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போயுள்ளது.

ரஜினிகாந்தின் கபாலி படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ.7.5 கோடிக்கும், பாகுபலி 2 படத்தின் உரிமை ரூ. 10.5 கோடிக்கும் போனது. விஜய்யின் தெறி படத்தின் கேரளா தியேட்டர்கள் வெளியீட்டு உரிமை ரூ.5.6 கோடிக்கு விலை போனது.

கேரளாவில் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அதிலும் முதல் நாள் முதல் காட்சியை காண தமிழகத்தில் எத்தனை அமர்க்களம் உள்ளதோ அதே போன்று தான் கேரளாவிலும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

LEAVE A REPLY