Home Tamil Cinema News விஜய்-அஜித் ரசிகர்கள் போட்டிப்போட்டு கொண்டு மக்களுக்கு உதவி

விஜய்-அஜித் ரசிகர்கள் போட்டிப்போட்டு கொண்டு மக்களுக்கு உதவி

95

vijay ajith

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள இளம் நடிகர்களில் விஜய்-அஜித்திற்கு தான் அதிக ரசிகர்கள். இவர்கள் ரசிகர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் மோசமாக சண்டையிட்டு கொள்வார்கள். சில நேரங்களில் இவர்களது சண்டை சமூக ஆர்வலர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு கூட சென்று விடுகிறது.

தற்போது அந்த நிலை கொஞ்சம் மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும், சென்னை மழையால் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து இரு தரப்பு ரசிகர்கள் ஒன்றினைந்து போட்டிப்போட்டு கொண்டு உதவி வருகின்றனர்.

இதில் மேலும் ஒரு நற்செய்தியாக இனி, நாங்கள் எங்களுக்குள் சண்டையிட்டு கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். எது எப்படியோ இந்த ஒற்றுமை உணர்வு தொடர்ந்தால் நன்மைதான்.