Home Tamil Cinema News விஜய்–சூர்யா படங்கள் தமிழ் புத்தாண்டில் மோதல்

விஜய்–சூர்யா படங்கள் தமிழ் புத்தாண்டில் மோதல்

115

theri-vs-24

அட்லி இயக்கத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் தெறி. இதில் சமந்தா, எமிஜாக்சன், ராதிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். தெறி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

தெறி படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தெறி படத்தை தமிழ் புத்தாண்டு தினத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநாளில் சூர்யா நடிப்பில் உருவாகும் 24 படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது. விக்ரம்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் போஸ்டர் தான் தமிழ் திரையுலக ரசிகர்களை மிரட்டிவருகிறது.

விஜய், சூர்யா படங்கள் தமிழ் வருட பிறப்பில் மோதுவதால் இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here