Home Tamil Cinema News பிச்சைக்காரனின் பாட்டுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி

பிச்சைக்காரனின் பாட்டுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி

111

SantaTitus-pichaikaran-heroine

பீப் பாடல் சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து விஜய் ஆண்டனியின் கோட்டா பாடலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் ப்ரமோ பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பாடலில், “கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான், தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த வரிகள் இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கி படித்த டாக்டர்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உட்பட பல்வேறு டாக்டர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

இது குறித்து கருத்து கூறியுள்ள இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, சமூக அவலங்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி, சமூக விழிப்புணர்வு பாடலாக, இந்த பாடலை நாங்கள் வடிவமைத்தோம். பல்வேறு டாக்டர்கள் சங்கத்தினர் கூறும் ‘கோட்டாவில் சீட்டு வாங்கிய டாக்டர்’ என்ற வார்த்தை தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறினார்

மேலும் இதுகுறித்து எங்கள் ‘பிச்சைக்காரன்’ படக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவித்து, ஒரு அறிக்கையை நான் வெளியிட இருக்கிறேன். இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் இடம்பெறா வண்ணம் இருக்க, இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம் என்றும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here