என் படத்திற்கு எதிர்மறையான பெயர்களை தேர்வு செய்யவில்லை என்று கூறும் விஜய் ஆண்டனி

என் படத்திற்கு எதிர்மறையான பெயர்களை தேர்வு செய்யவில்லை என்று கூறும் விஜய் ஆண்டனி

106

Vijay-Antony

இசையமைப்பாளராக அறிமுகமாகி முக்கிய ஹீரோவாக உயர்ந்து இருக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாகும் படம் “சைத்தான்”. புதுமுக இயக்குனர் பிரதி கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி சாப்ட்வேர் என்ஜினீயராக நடிக்கிறார்.

இவருடன் அருந்ததி நாயர், அலிஷா அப்துலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். பிச்சைக்காரன், சைத்தான் என்று எதிர்மறையான பெயர்களை தனது படத்துக்கு சூட்டுவது பற்றி விஜய் ஆண்டனியிடம் கேட்ட போது ‘படத்திற்கு படம் என்னுடைய தோற்றத்தில் கவனம் செலுத்துவதை விட, எப்படி வலுவான திரைக்கதையை கொண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வது என்பதில் தான் நான் அதிக அக்கறை செலுத்தி வருகிறேன்.

கதையை விட கதையின் கரு தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும். அந்த வகையில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த ‘சைத்தான்’ திரைப்படம், கண்டிப்பாக மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த படத்தின் அறிமுக இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி, அனுபவம் வாய்ந்த இயக்குனராக செயல்பட்டது படத்துக்கு பலம்.

என் படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளை நான் தேர்வு செய்யவில்லை. அவை தாமாகவே அமைகின்றன’ என்று கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY