Home Tamil Cinema News ஆக்ஷ்ன் ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி

ஆக்ஷ்ன் ஹீரோவாக நடிக்கும் விஜய் ஆண்டனி

96

Eman

பிச்சைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்கின்ற அளவுக்கு வந்துவிட்டார். அவரது முந்தய படங்களை விட இந்தப்படம் வசூலை வாரி குவித்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இவர் அடுத்து நடிக்கும் படங்களில் வித்யாசமான கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கப்போவதாக கூறப்பட்டது. அந்த வகையில் நான் படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி தற்போது எமன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கிவிட்டாராம், இந்தப்படன் ஆக்ஷன் விரும்பிகளுக்கு நல்ல விருந்தாக அமையுமென படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டது. பிச்சைக்கரன் படத்தை போல இதையும் ரசிகர்கள் விரும்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.