Home Tamil Cinema News மற்ற ரசிகர்களையும் கவரும் கதைக்களத்தில் விஜய் ஆன்டனி..

மற்ற ரசிகர்களையும் கவரும் கதைக்களத்தில் விஜய் ஆன்டனி..

100

ஆர் ஸ்டுடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரே‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணாதுரை’.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குனர் ஸ்ரீனிவாசன் கூறுகையில்: “மிகப்பெரிய தலைவரான அண்ணாவின் பெயரைக்கொண்ட படம் இது. என்றாலும், அவருடைய வாழ்க்கையை சார்ந்த படமல்ல. விஜய் ஆண்டனி ரசிகர்களையும் மற்ற ரசிகர்களையும் உற்சாகப்படுத்தும் வேறு கதைக்களத்தை கொண்டது.

இதில் விஜய் ஆண்டனி இரண்டு பாத்திரங்களில் நடித்து இருக்கிறார். குடும்பபாங்கான ஜனரஞ்சகமான இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்” என்றார்.

தெலுங்கில் இந்த படம் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியாகிறது.