Home Tamil Cinema News அஜித் ஸ்டைலை காபி அடிக்கும் விஜய்

அஜித் ஸ்டைலை காபி அடிக்கும் விஜய்

239

vijaynewlooktheri-20-1453293615

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். விஜய் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய் இரு கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் புகைப்படங்களில் விஜய் ஒரே கெட்டப்புகளில் இருக்கிற மாதிரியான புகைப்படங்களே வெளிவந்தன. ஆனால் படப்பின் போது விஜய் ரசிகர்களுடன் புகைபடங்கள் எடுத்துக்கொள்ளும் காட்சிகள் சில, புகைபடங்களாக வெளிவந்துள்ளன.

இதனால் தற்போது விஜய்யின் புதிய கெட்டப் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த படத்தில் விஜய் மொட்டைத் தலையில் சற்று முடி வளர்ந்துள்ளது போன்ற ஒரு கெட்டப்பில் வருகிறார். இந்த கெட்டப்புடன் அவர் ரசிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஏற்கனவே நடிகர் அஜித் ரெட், வேதாளம் ஆகிய படங்களில் மொட்டைத் தலையுடன் நடித்திருந்தார். அஜித்தின் இந்த கெட்டப்பை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர். தற்போது விஜய்யும் அதுபோல் ‘தெறி’ படத்தில் நடித்திருப்பதால், அஜித்தை போலவே விஜய்க்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் எனன்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.