Home Tamil Cinema News விஜய் அந்தக் காட்சியில் நடிக்கவில்லை – தெறி படக்குழு மறுப்பு

விஜய் அந்தக் காட்சியில் நடிக்கவில்லை – தெறி படக்குழு மறுப்பு

673

theri-movieஅட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இப்படத்தில் விஜய் வேதாளம் படம் பார்ப்பது போல் ஒரு காட்சி வருவதாக சமூக வலைதளங்கம் வாயிலாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த செய்தி வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் அனைத்து தகவல் தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. ஆனால், படக்குழு இதுக்குறித்து எந்த தகவலும் கூறவில்லை. அப்படி எந்த காட்சியும் எடுக்கவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விசாரித்து பார்த்தால் விஜய்-சமந்தா படம் பார்ப்பது போல் ஒரு காட்சி இருக்கிறதாம், அந்த படம் வேதாளம் படம்தான் என்று உறுதி செய்ய முடியவில்லை என தகவல்கள் தெரியவந்துள்ளது.