Home Tamil Cinema News தெறி ட்ரைலரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

தெறி ட்ரைலரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

128

 

தெறி(Theri) Official Movie Trailer 2016

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தில் விஜய் போலிஸ் அதிகாரியாக மிரட்டியுள்ளார். மொத்தம் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவில் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

டிரைலரை பார்க்கும் போது படத்தில் தந்தை-மகள் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெளிவாகிறது. இயக்குனர் அட்லியே கூறியிருப்பது போல் ரொமான்டிக் விஜய், மாஸ் விஜய், அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச, அவருக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் என்று மூன்று கெட்டப்புகளில் அசத்தியுள்ளார் விஜய்.

இந்த ட்ரைலர் வெளிவந்த 10 மணி நேரத்திலேயே 10 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.

அது மட்டுமின்றி ஒரு நாள் கூட முடிவடையாத நிலையில் 1.2 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதுவரை வந்த இந்திய படங்களின் ட்ரைலரிலேயே தெறி தான் குறைந்த நேரத்தில் இத்தனை லைக்ஸுகளை பெற்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.