உறியடி படத்தை ஏன் எடுத்தேன் என இன்று வரை கவலைப்படுகிறேன்- இயக்குனர் வருத்தம்

உறியடி படத்தை ஏன் எடுத்தேன் என இன்று வரை கவலைப்படுகிறேன்- இயக்குனர் வருத்தம்

69

hqdefault

தமிழ் சினிமாவில் உறியடி என்ற தரமான படத்தை கொடுத்தவர் விஜய் குமார். இப்போதெல்லம் எப்போதாவது தான் ஒரு நல்ல படம் வெளிவருகிறது. அந்த வரிசையில் உறியடி படமும் இடம்பிடித்திருக்கிறது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இந்தப் படம் தமிழகம் முழுவதும் அனைவரையும் சென்றடையவில்லை, இளைஞர்கள் மத்தியில் லேப்டாப், மொபைலில் தான் இந்தப் படம் பரவியது. இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்,

‘உறியடி படத்தை நான் ஏன் எடுத்தேன் என்று இன்று வரை வருத்தப்படுகிறேன், அந்த அளவிற்கு எனக்கு இந்த படம் வலியை கொடுத்துவிட்டது. இதை எல்லோரிடம் கொண்டு சென்ற திருட்டு விசிடிக்கு நன்றி, வேறு வழியில்லை எந்த திரையரங்கிலும் படம் ரிலிஸாகாததால் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இந்த படம் எனக்கு நிறைய வலிகளை கொடுத்துவிட்டது, பாராட்டை வைத்து ஒரு டீ கூட வாங்க முடியாது, அதே நேரத்தில் ரசிகர்களின் உண்மையான அன்பால் தான் இந்த படம் எடுத்ததற்கு கொஞ்சம் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY