Home Tamil Cinema News விஜய் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய தகவல்கள் வெளியானது

விஜய் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய தகவல்கள் வெளியானது

44

பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் பைரவா. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து எதிர்ப்பார்த்த வசூலை எடுக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் விஜய் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்,  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு யார் இசையமைப்பாளார் என்று இதுவரை தெரியாமல் இருந்தது.

ஏனெனில் ஜி.வி பிரகாஷ் ஹீரோவாகிவிட்டதால் அட்லீ யாரை கமிட் செய்யலாம் என யோசித்து வந்தார். எப்படியோ கடைசியாக இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை அட்லீ படக்குழு கமிட் செய்துள்ளது.