Home Tamil Cinema News மாதவனுக்கு வில்லனான விஜய் சேதுபதி!

மாதவனுக்கு வில்லனான விஜய் சேதுபதி!

185

vijay sethupathi, madhavan

மாதவன் இறுதிச்சுற்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் திரும்பவும் கால் பதிக்கவுள்ளார். இறுதிச்சுற்று படத்தின் விற்றியை தொடர்ந்து மாதவன் எந்த படத்தில் நடிப்பார் என்பது ரசிகர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் மாதவன் அடுத்து புஷ்கர் காய்த்ரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இதில் மாதவன் போலிஸாக நடிக்க, விஜய் சேதுபதி பில்லா அஜித் போல கேங்ஸ்டராக நடிக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கிவிட்டன. மாதவன், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் பட்டாளம் இதில் ஒன்றிணைந்துள்ளதால் படத்திற்கான கதை நகர்விலும், பெயரை வைப்பதிலும் அதன் இயக்குனர் புஷ்கர் காய்த்ரி கவனமாக உள்ளாராம்.