சமூக வளைதளங்களில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் றெக்க டீசர்

சமூக வளைதளங்களில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வரும் றெக்க டீசர்

170

Vijay Sethupathi Starring Rekka Teaser Released

விஜய் சேதுபதி நடித்துள்ள படம் றெக்க படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை ரத்னா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக முதன்முறையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி தனது மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக இப்படத்தில் நடித்துள்ளார் என்பது டீசரைப் பார்த்தாலே புரிகிறது. சேதுபதி படத்தில் போலீசாகவும், நானும் ரவுடி தான் படத்தில் ரவுடியாகவும் பட்டையைக் கிளப்பிய விஜய் சேதுபதி, இப்படத்தில் வித்தியாசமான ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டீசரில் வெளியாகியுள்ள காட்சிகளைப் பார்க்கும் போது, மதுரையைக் களமாகக் கொண்டு தயாராகி இருக்கும் இப்படம் மற்றொரு ‘கில்லி’யாக சொல்லியடிக்கும் என்று பலரால் கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் தற்போது சமூக வளைதளங்களில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

றெக்க படத்தின் டீசர் பார்க்க… 

NO COMMENTS

LEAVE A REPLY