Home Tamil Cinema News விஜய் சேதுபதியின் ‘இறைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் சேதுபதியின் ‘இறைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

144

iraivi_teaser_t

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி ஆகியோர் நடித்துள்ள படம் ‘இறைவி’. விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து படத்திற்கான பின்னணி பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்படம் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் இப்படத்தை திரையிட முடிவு செய்திருக்கின்றனர். மேலும் இம்மாத இறுதியில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களைப் போல ‘இறைவி’ படமும் பெரிய வெற்றிபெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.