Home Tamil Cinema News விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘காதலும் கடந்து போகும்’

விஜய்சேதுபதியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘காதலும் கடந்து போகும்’

107

kadhalum-kadanthu-pogum

விஜய்சேதுபதி நடித்த ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய இயக்குனர் நலன் குமாரசாமியின் அடுத்த படமான ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நானும் ரெளடிதான் படத்தை போலவே இந்த படத்திலும் விஜய்சேதுபதி காமெடி ரெளடியாக நடித்துள்ளதாகவும், ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிபவராக நடித்துள்ள ‘பிரேமம்’ புகழ் மடோனா செபாஸ்டியனை அவர் துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சி.வி.குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பட வேலைகள் முடிந்துள்ள இந்நிலையில் இந்த படம் வரும் காதலர் தினமான ‘பிப்ரவரி 14’ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.