Home Tamil Cinema News விஜய்யுடன் நடிக்கும் இளம் நடிகை!

விஜய்யுடன் நடிக்கும் இளம் நடிகை!

199

vijay

 

நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார். அந்தப் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் இவருக்கு விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷை ஹீரோயினாக கமிட் செய்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தமிழ் சினிமா ஹீரோயின் எல்லோருக்கும் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர். இதை வெளிப்படையாகவே வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.