Home Tamil Cinema News வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி அரசுக்கு கொடுப்பதற்காக காத்திருக்கும் விஜய்

வெள்ள நிவாரணத்திற்கு ரூ.5 கோடி அரசுக்கு கொடுப்பதற்காக காத்திருக்கும் விஜய்

195

vijay

நடிகர் விஜய் வெள்ள நிவாரணத்திற்காக நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார். நடிகர் விஜய், நிவாரண நிதியாக, ஐந்து கோடி ரூபாய் வழங்க காத்திருக்கிறார். தமிழக அரசு தரப்பில், அதிகாரிகள் நேரம் ஒதுக்காததால், அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தி.மு.க., சார்பில், வெள்ள நிவாரண நிதியாக, ஒரு கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அதை, தமிழக அரசிடம் வழங்க முடியாத நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டன அறிக்கை வெளியிட்ட பிறகே, தமிழக நிதித்துறை செயலர் சண்முகம், நேரம் ஒதுக்கிக் கொடுக்க, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ஒரு கோடி ரூபாய் கொடுத்தார். அதன் பின், பலரும், தமிழக அரசிடம் நிதி வழங்க, நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர் மழையை தொடர்ந்து, தமிழக அரசிடம் வெள்ள நிவாரண நிதியை வழங்க பலரும், தலைமை செயலரிடம் நேரம் கேட்டு காத்திருக்கின்றனர்.

இதனிடையே நடிகர் சங்கம் சார்பிலும் நிதியுதவி திரட்டப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், சிவக்குமார் விஷால், தனுஷ், சிவகார்த்தி்கேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிதியுதவி அளித்துள்ளனர். நிதி எல்லாம் ஒன்றாக திரட்டப்பட்டு நடிகர் சங்கம் சார்பில் முதல்வரிடம் வழங்கப்பட இருக்கிறது. ஆனால் அரசு மக்களைத்தான் கண்டுகொள்ளவில்லை என்று நினைத்தால் உதவி வழங்குபவர்களையும் காத்திருக்கவைக்கிறது. காலம் கடந்து மக்களுக்கு கிடைக்கும் உதவியால் மக்களுக்கு என்ன பயன் இருக்கபோகின்றது என்றுதான் தெரியவில்லை.