Home Tamil Cinema News மீண்டும் நடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்

மீண்டும் நடிப்புக்கு திரும்பிய விஜயகாந்த்

121

Vijayakanth again Returned to Acting

தேமுதிகவின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட விஜயகாந்த் உளூந்தூர்பேட்டையில் டெபாசிட்கூட வாங்காமல் மோசமான தோல்வியை தழுவினார்.

வாக்கு சதவீதம் குறைந்த காரணத்தால் மாநில கட்சிக்கான அந்தஸ்தை தேமுதிக இழக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி அரசியல் கட்சி அந்தஸ்தை இழக்கும்பட்சத்தில், முரசு சின்னத்தையும் அக்கட்சி இழக்கக்கூடும்.

இந்த மாபெரும் அதிர்ச்சியில் இருக்கும் தனது கட்சி தொண்டர்களை ஊக்குவிக்கும் விதமாக, ‘நம் வெற்றி தாமதப்படுத்தப்பட்டிருக்கிறது, மனம் தளரவேண்டாம். நாம் ஆட்சியமைப்பது உறுதி’ என்று விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார். அத்துடன் ‘தமிழன் என்று சொல்’ படத்தின் படப்பிடிப்பில் இருப்பது போல் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here