Home Tamil Breaking News இன்று பிறந்த நாள் காணும் விஜயகாந்த்: வை.கோ நேரில் வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் விஜயகாந்த்: வை.கோ நேரில் வாழ்த்து

21

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி மதிமுக பொது செயலாளர் வை.கோ நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

விஜயகாந்த், விருதுநகர் மாவட்டம், ராமானுஜபுரத்தில், அழகர்சாமி நாயுடு – ஆண்டாள் தம்பதிக்கு, 1952 ஆக., 25ல் பிறந்தார். படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. 1978 முதல், 156 படங்களில் நடித்திருக்கிறார். கேப்டன் பிரபாகரன் எனும் படத்திற்கு பின், ‘கேப்டன்’ என, ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.கடந்த, 2005ல், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற பெயரில், கட்சி துவக்கினார். 2006 சட்டசபை தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும், படு தோல்வி. 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து ௨௯ எம்.எல்.ஏ.,க்களை பெற்றதால், எதிர்க்கட்சி தலைவரானார்.
மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், ம.தி.மு.க., – கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ௨௦௧௬ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது; ஒருவர் கூட வெற்றி பெறவில்லை! அவர் பிறந்த தினம், இன்று.