Home Tamil Cinema News கபாலி பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்

கபாலி பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் விஜய் ரசிகர்கள்

417

vijay-57சமீபத்தில் கபாலி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு, கபாலி ரூ 8.5 கோடிக்கு அமெரிக்காவில் வியாபாரம் ஆகியிருப்பதாக கூறினார். இவர் தான் விஜய் நடித்து வரும் தெறி படத்தின் தயாரிப்பாளரும் ஆவார்.

மேலும் அவர் வேறு எந்த நடிகரின் படங்களும் ரூ 2.5 கோடி கூட தாண்டியது இல்லை என குறிப்பிட்டு இருந்தார். கபாலி படத்தை முன்னிருத்தி இவர் பேசியது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ரசிகர்களின் பலம் தமிழகத்தை தாண்டி தற்போது கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என அதிகமாகி கொண்டே இருக்கின்றது. மேலும், வெளிநாடுகளிலும் விஜய் படங்களுக்கான வியாபாரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.