Home Tamil Cinema News விஜய்யின் புலி கூட்டணி மீண்டும் இணைகிறது

விஜய்யின் புலி கூட்டணி மீண்டும் இணைகிறது

130

vijay_puli

இளைய தளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய புலி படம் கடந்த வருடம் வெளிவந்து பெரிய வெற்றிபெற்றது. இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் விஜய் நடிக்கும் 60-வது படத்திற்கும் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே பாடல்களை எழுதவுள்ளார். இந்த படத்தையும் அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் வைரமுத்துவே எழுதவுள்ளார். ‘புலி’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்-வைரமுத்து கூட்டணி மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒருசில வாரங்களில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here