Home Tamil Cinema News விஜய் – அட்லி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது

விஜய் – அட்லி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது

153

Theri 1

விஜய் நடித்து வரும் படத்துக்கு ‘தெறி’ எனத் தலைப்பிட்டு இருக்கிறார்கள். அட்லீ இதனை இயக்குகிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இளயதளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார். விஜய் – சமந்தா ஜோடிக்கு நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார்.

Theri 2

வில்லனாக மகேந்திரன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார். பெயர் வைக்கப்படாமல் தயாரிக்கப்பட்ட விஜயின் முதல் படம் இது என திரையுலகில் பேசப்படுகிறது. தற்போது இப்படத்துக்கு ‘காக்கி’, ‘வெற்றி’, ‘தெறி’ ஆகிய பெயர்கள் பரிசீலக்கப்பட்டு இறுதியாக ‘தெறி’ என்ற மிரட்டலான தலைப்பை இறுதி செய்திருக்கிறார்கள். ட்விட்டர் தளத்தில்தான் முதலில் ‘தெறி’ என்று தலைப்போடு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

விஜயின் ட்ரஸ்ஸிங்க் ஸ்டைல் ஆகியவை மற்ற படங்களை விட புதுமையாக பர்ஸ்ட் லுக் படத்தில் காட்டியிருகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டதில் இருக்கின்றனர்.