Home Tamil Cinema News படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் விஜய்யின் ‘தெறி’

படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் விஜய்யின் ‘தெறி’

152

theri-movie-new-photos

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, மகேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தெறி. விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது.

சமீபத்தில் விஜய் சமூக விரோதிகளுடன் மோதுவது போன்ற அதிரடியான சண்டைக்காட்சி ஒன்ற இயக்குநர் அட்லீ கோவாவில் படம் பிடித்திருக்கிறார். வரும் 10 ம்தேதி தெறி படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சி பெரம்பூர் பின்னி மில்லில் படமாக்கப்படவிருக்கிறது. இந்த சண்டைக் காட்சியில் வில்லன் மகேந்திரன் மற்றும் அவரது அடியாட்களுடன் விஜய் மோதவிருக்கிறார். இதற்காக ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனராம்.

தெறி படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதை படத்தின் நாயகி எமி ஜாக்சன் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். விஜய், நான் மற்றும் மொத்தப் படக்குழுவினரும் கோவாவில் இருக்கிறோம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது என்று அவர் கூறியிருக்கிறார்.