Home Tamil Cinema News தெறி படத்தின் டீசர் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

தெறி படத்தின் டீசர் வெளியிடப்படும் தேதி அறிவிப்பு

149

vijay

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து தற்போது உருவாகியுள்ள படம் தெறி. தற்போது நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கடந்த பொங்கல் தினத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.

இந்தநிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்திருக்கின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்த டீசர் 50 வினாடிகள் ஓடக்கூடியது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெறி படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் இதுவரை வெளியான டீசர்களின் சாதனையை தெறி டீசர் முறியடிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.